காதலியை 35 துண்டுகளாக கூறுபோட்ட காதலன்.. தந்தையாலே அடையாளம் காண முடியாத சோகம்

x

டெல்லியில் காதலனால் வெட்டி வீசப்பட்ட இளம்பெண் ஷிரத்தாவின் தந்தையிடம் டி.என்.ஏ. மாதிரியை போலீசார் பெற்றுள்ளனர்.

ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவத்தில் டெல்லி போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கொலை நடந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில், விசாரணை சவால்கள் நிறைந்ததாக உள்ளது. அமீனை காட்டிற்கு அழைத்துச் சென்று எலும்பு துண்டுகளை சேகரித்துள்ள போலீசார், சமையல் அறையில் ரத்தக்கறை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஷிரத்தாவை வெட்ட அமீன் பயன்படுத்திய ஆயுதம் இன்னும் சிக்கவில்லை. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் நீண்ட நாள் பதிவுகள் இல்லையென கூறப்படுகிறது. முந்தைய பதிவுகளை பெற போராடும் போலீசார், ஷிரத்தா கொலை செய்யப்பட்ட காலங்களில் அமீன் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையே, சேகரிக்கப்பட்ட உறுப்புகள், ஷிரத்தாவுடையதா என ஆய்வு செய்வதற்காக, அவருடைய தந்தையிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகளும் பெறப்பட்டிருக்கிறது. மேலும், அஃப்தாபுக்கு சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனை செய்ய போலீஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்