தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் மேல் - பட்டென்று இடிந்து விழுந்த ஓட்டு வீடு

x

வடக்கு நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி கூலித் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு, முத்துப்பிள்ளை என்ற மனைவியும், பூமாயி என்ற திருமணம் ஆன மகளும், பூமிராஜ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தனது வீட்டில், அவர் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென்று வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது.

இதில் பாண்டியின் மனைவி, மகன் மற்றும் மகளுடன், பூமாயி-இன் 2 குழந்தைகளும் சிக்கி காயமடைந்தனர்.

இந்த நிலையில், இவர்களது அலறல் சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமான நிலையில், குழந்தைகளுடன் தங்க இடமின்றி தவித்து வருவதால், அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கண்ணீருடன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்