ஒரு லிட்டர் பால் ரூ.210.. ஒரு கிலோ கோழி கறி ரூ.500... - கடும் நிதி நெருக்கடியில் தடுமாறும் பாக்.

x

கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானில், பால் விலை லிட்டருக்கு 210 பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், பிராய்லர் கோழி விலை கிலோவிற்கு 500 பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு விகிதம் 27.6 சதவீதமாக கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கோதுமை மாவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானின் அன்னிய கடன் சுமை 12 ஆயிரத்து 691 கோடி டாலராக உள்ள நிலையில், அதன் வசம் உள்ள அன்னிய செலாவணி அளவு 291 கோடி டாலராக சரிந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்ய போதுமான டாலர் இல்லாததால், பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 650 கோடி டாலர் அளவுக்கு அவசர கடன் பெற பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால், கடன் பெறுவது தாமதமாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்