ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மதில் சுவர் மேல் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மதில் சுவர் மேல் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது வாகன ஓட்டிகளை அச்சம் அடைய செய்துள்ளது.

சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தின் மதில் சுவரில், சிறுத்தை ஒன்று மெதுவாக அங்கும் இங்கும் நடந்து சென்றது.

பின்னர், சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை வனப்பகுதியில் தாவி குதித்து ஓடி மறைந்தது.

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com