காதல் ஜோடியிடம் தகராறு செய்த ரவுடிகளை தனியாளாக ஓடவிட்ட பெண் சிங்கம் - சென்னை மெரினாவில் அரங்கேறிய சம்பவம்

x

சென்னை மெரினாவில், போதையில் காதல் ஜோடியை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரவுடிகளை, தனி ஆளாக சமாளித்து ஓடவிட்ட பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சென்னை மெரினா கடற்கரையில், குறிப்பாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிராக உள்ள பகுதியில், காதலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அவர்களது வாகனத்தை இடித்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதுடன், அவரது செல்போனையும் ரவுடிகள் பறித்துள்ளனர். இதனைக் கண்ட பெண் காவலர், அந்த ரவுடிகளை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது பெண் காவலரையும் தகாத வார்த்தைகளால் பேசியதை அடுத்து, அருகில் உள்ள அண்ணாசதுக்கம் காவல்நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளார். இதனை அறிந்த ரவுடிகள், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் காதல் ஜோடி அளித்த புகாரில், சிசிடிவி காட்சி உதவியுடன், வால் டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த உதயகுமார், தமிழரசன், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, தைரியமாக செயல்படம்ட புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்