"என் காவல் தெய்வமே அவ தான்".. இறந்த மனைவி சிலையுடன் வாழும் கணவர்

x

அச்சக உரிமையாளரான 85 வயதான நாராயணனின் மனைவி ஈஸ்வரி, கடந்த 2015ம் ஆண்டு காலமானார். இதையடுத்து, மனைவியின் மார்பளவு வெண்கல சிலையை வீட்டின் முன் வைத்து, காவல் தெய்வமாக வணங்கி வருகிறார். இந்நிலையில், 9 லட்சம் ரூபாய் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் முழு உருவ சிலையை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார். இந்த சிலைக்கு, பட்டுப்புடவை ஆபரணங்கள் அணிவித்து, வீட்டில் நடுவில், சோபாவில் அமர்ந்த நிலையில் வைத்துள்ளார். பார்ப்பதற்கு நிஜ பெண்ணை போலவே காணப்படும் மனைவி சிலையுடன் நாராயணன் வசித்து வருகிறார். இந்த சிலை மூலம் தமது மனைவி தன்னுடன் வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மனைவியின் தலை முடியையும், நாராயணன் பாதுகாத்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்