இறப்பிலும் பிரியாத கணவன் மனைவி - விழுப்புரத்தில் அரங்கேறிய சோகம்

x

விழுப்புரம் அருகே கணவர் இறந்த செய்தி அறிந்து மனைவி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சேகர் - பாஞ்சாலை தம்பதி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சேகர் உயிரிழந்தார். இதனைக் கேட்ட அடுத்த நிமிடமே மனைவி பாஞ்சாலையும் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டாச்சிபுரத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்