கண்முன் அணுஅணுவாக இடிக்கப்பட்ட வீடு.. தாயை கட்டிக்கொண்டு கதறிய சிறுமி - நெஞ்சை கரைய வைக்கும் காட்சிகள்
காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டிய வீட்டை இடிக்கும் போது, தாயைக் கட்டிக் கொண்டு அழுத சிறுமியின் செயல் காண்போர் நெஞ்சை கரைய வைத்தது. வேகவதி ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க நீர்வளத்துறையினர் சென்ற போது, வீட்டில் இருந்த பொருட்களை சிறுவர்களும் பெரியவர்களும் எடுத்துச் சென்றனர். பின்னர், ஜெசிபி எந்திரம் மூலம் வீட்டை இடிக்கும் போது, தனது தாயை கட்டிப் பிடித்துக் கொண்டு, வீட்டை இடிக்கிறார்கள் அம்மா என்று சிறுமி கண்ணீருடன் அழுத்து, காண்போர் நெஞ்சை கரையவைத்தது.
Next Story
