அரசு அலுவலக சாலையில் திடீரென தோன்றிய பள்ளம் - மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரிசாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாகவே பாதாளசாக்கடை குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கச்சேரிசாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை உள்வாங்கி 20அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி பேரிகார்டு வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com