மன்னருக்கு கொடுத்த பிரம்மாண்ட வாழ்த்து... இது ஒரு பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்து!

x

நமக்கு பிடிச்சவங்களோட பர்த்டே அன்னைக்கு... காசு இருந்தா கிஃப்ட் குடுத்து விஷ் பண்ணுவோம்... காசு இல்லனா கை குடுத்து விஷ் பண்ணுவோம்... அட அதுக்கும் டைம் இல்லனா... போன்லயே விஷ் பண்ணுவோம்.... ஆனா தாய்லாந்த சேந்த ஒரு பைக் ரைடு குழு.... தங்களோட நாட்டு மன்னருக்கு... பிறந்த நாள் வாழ்த்த கொஞ்சம் வித்தியாசமா விஷ் பண்ணிருக்காங்கங்குறது தான் இப்போ ஹாட் டாப்பிக்கே...

ஊர்ல பெரிய தலைகளுக்கு பொறந்த நாள் வந்தா... நம்மூர் காரங்க மாதிரி போஸ்டர் அடிச்சு பேனர் கட்டுவாங்கனு பாத்தா... மன்னா... நீங்க நீடூடி வாழனும்குறதை சொல்லுறதுக்கு... பெரிய மைதானத்துக்குள்ள... 100க்கும் மேற்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்க கொண்டு வந்து.... வரிசை கட்டி நிறுத்திட்டாங்க...

பர்த்டே விஷ் பண்ண வந்துட்டு... என்னங்க ஆள் ஆளுக்கு பைக் பார்க் பண்ணிட்டு இருக்கீங்னு... கேட்டப்போ... கொஞ்சம் டாப் ஆங்கில் வீவ்ல பாருங்கனு பதில் வந்துச்சு... சரி அப்படி என்னவா இருக்கும்னு... நம்மளும் ட்ரோன்ன பறக்க விட்டு பாக்கும் போது... நம்மள மிரள வச்சுட்டாங்க...

அதாவது டாப் ஆங்கில் பாக்கும் போது Long Live the King-10 னு... வர மாதிரி... பைக் பார்க் பண்ணி... தாய்லாந்து மன்னருக்கு... பிரம்மாண்டமான வாழ்த்த சொல்லிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்