ஜோக்கர் வேஷத்தில் பிரம்மாண்ட திருவிழா… குடும்பமா வாங்க... குதூகலமா போங்க....

x

எதாச்சும் வேஷம் போட்டு கலக்கலா நடந்து வரனும்னு ஆசைபட்டா… பேட் மேன், சூப்பர் மேன், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன்னு…. சூப்பர் ஹீரோ வேஷம் தான் போடுவோம்.

ஆனா ஜோக்கர் வேஷம் போட சொன்னா… ரொம்பவே யோசிப்போம்… ஏனா எல்லாரும் நம்மள பாத்து சிரிப்பாங்கங்குற எண்ணம் தான்…. ஆனா இங்க ஒரே ஊரே ஜோக்கர் வேஷம் போட்டு ஊர்வலம் நடத்தியிருக்காங்க….

சரி… ஒரு நாளஞ்சு பேரு ஜோக்கர் இருந்தாங்கனா… ஏதோ சர்க்கஸ் காட்டுறாங்கனு… வேடிக்கை பாத்துட்டு போகலாம்… ஆனா ஒட்டுமொத்த ஊரே கலர் கலர்ரா ஜோக்கர் வேசம் போட்டு ஊர்வலம் போறாங்களே என்னவா இருக்கும்னு… கூட்டத்துல இருந்த ஒரு ஜோக்கர் கிட்ட விசாரிச்சப்போ…

தை ஒன்னு வந்தா… நம்மளாம் ஜாலியா பொங்கல் கொண்டாடுற மாதிரி… மே 25 வந்தா உடனே ஜோக்கர் வேஷம் போட்டு… செலப்ரேட் பண்ண ஆரம்ப்பிச்சுடுவாங்களாம் இந்த பெரு நகர மக்கள்…

இந்த ஊர்ல Tony Perejil அப்டிங்குறவரு… ஜோக்கர் வேஷம் போட்டு ஊர் மக்கள சிரிக்க வச்சுட்டு வந்திருக்காரு… முக்கியமா ஓடி உழைக்கிற ஏழை பாழை மக்கள சிரிக்க வைக்கனும்ங்குறதுக்காகவே… ஃப்ரீயா ஷோ நடத்தியிருக்காரு…. இதனாலயே இவரை… ஏழைகளின் கோமாளினு மக்கள் செல்லமாவும் கூப்பிட்டிருக்காங்க….

பல நாள் பலர சிரிக்க வச்ச Tony Perejil… 1987 ல இறந்து போனதனால அவரால சிரிச்சவங்கலாம் அழ ஆரம்பிச்சுட்டாங்க…

அதுகப்புறம் மனசை தேத்திகிட்ட மக்கள், அவரோட நினைவாவும்… ஜோக்கர் அடையாளத்த பெருமை படுத்தும் விதமாவும்…

ஏழை மக்கள சிரிக்க வச்ச அந்த ஜோக்கர் மகானுக்காக… மே 25 அன்னைக்கு Clown Day னு ஒரு டேய உருவாக்கி செலப்ரேட்… பண்ண ஆரம்பிச்சுட்டாங்க…

சே… என்ன டச்சிங் சம்பவம்ல… ஒரு நல்ல கலைஞனை ஊரே கொண்டாடுது.

சரி வாங்க… நாமளும் அவருக்காக ஒரு ஜோக்கர் ஆட்டத்தை போட்டுட்டு வரலாம்…


Next Story

மேலும் செய்திகள்