நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. பைக்கை குறுக்கே விட்டு மறித்த ராணுவ வீரர் - நாங்குநேரியில் பதற்றம்

நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. பைக்கை குறுக்கே விட்டு மறித்த ராணுவ வீரர் - நாங்குநேரியில் பதற்றம்
Published on

 நாங்குநேரி அருகே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் முன், இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கணேசராஜா, நெல்லை செல்வதற்காக பரப்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணேசராஜா, இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் செய்தார்.

தகவலறிந்து விரைந்த போலீசார் பேருந்து ஓட்டுனரை எச்சரித்து, கணேசராஜாவை அதே பேருந்தில் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com