"நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்" - மனைவியின் நகையை வைத்து ஊருக்காக பாலம் கட்டிய ஓட்டுநர் | Hariyana

x

ஒடிசாவின் ராயகடா மாவட்டம், காசிப்பூர் வட்டாரத்தில் இருக்கிறது, குஞ்சரம்பரா கிராமம். பக்கத்து காலகந்தி மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் செல்லவேண்டுமானால், ஆற்றைக் கடந்துதான் ஊர்காரர்கள் செல்லமுடியும். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தருவதாக வாக்குறுதிகளைத் தந்தார்கள். ஆனால், அது நடந்தபாடில்லை.

இருபத்தாறு வயது லாரி ஓட்டுநர் ரஞ்சித் நாயக்குக்கு அப்படியே சும்மா இருந்துவிட மனமில்லை.

சொந்த செலவில் கடந்த ஜூனில் அங்கு மரப் பாலம் அமைக்கத் தொடங்கினார்.

திட்டமிட்டதைவிட கூடுதலான மரங்களும் மூங்கிலும் குச்சிகளும் தேவைப்பட...

அவரின் தந்தை உதவிசெய்தும், பணம் போதவில்லை.

தன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து 70ஆயிரம் ரூபாய்க்கு மரங்களை வாங்கி, பாலத்தை அமைத்து முடித்துள்ளார்.

பல தரப்புகளிலிருந்தும் ரஞ்சித்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.


Next Story

மேலும் செய்திகள்