காதலியை தேடி வீட்டுக்கு சென்ற பெண் 'காதலி'க்கு விழுந்த சரமாரி அடி - பரபரப்பு வீடியோ

x

கன்னியாகுமரி அருகே தனது காதலியை தேடி சென்ற பெண்ணை, காதலியின் பெற்றோர் தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த மாணவிக்கு, திருச்சியில் படிக்கும்போது மற்றொரு மாணவி உடன் காதல் மலர்ந்து, இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த தூத்தூர் மாணவியின் பெற்றோர், தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த திருச்சி மாணவி, காதலியின் வீட்டிற்கு சென்று அவருடன் பேச முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தூத்தூர் மாணவியின் பெற்றோர், திருச்சி மாணவியை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்