நள்ளிரவில் திடீரென உயிரிழந்த தந்தை... உடலை கட்டிப்பிடித்து கதறி அழுது விட்டு வைராக்கியத்துடன் தேர்வு எழுத சென்ற மாணவி

x
  • நள்ளிரவில் திடீரென உயிரிழந்த தந்தை... உடலை கட்டிப்பிடித்து கதறி அழுது விட்டு வைராக்கியத்துடன் தேர்வு எழுத சென்ற மாணவி.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் தாசரபுரம் பகுதியைச் சேர்ந்த முருகதாசுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
  • முருகதாஸ் உடல்நலக் குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.
  • 3வது மகளான திலகா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தந்தையின் மறைவால் மனமுடைந்த போதிலும் திலகா வைராக்கியம் கொண்டு, தந்தையின் உடலைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டு பொதுத்தேர்வு எழுதச் சென்றார்.
  • இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழச் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்