துணிக் கடையில் புகுந்த கும்பல்...ஊழியரை தாக்கி பணம் பறிப்பு - தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

x

துணிக் கடையில் புகுந்த கும்பல்...ஊழியரை தாக்கி பணம் பறிப்பு - தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் டெமோ துணி கடையில் சந்துரு என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 27ஆம் தேதி இரவு அந்த கடைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். சந்துருவின் கழுத்தில் இருந்த செயின், 3 மோதிரங்கள் உட்பட 3 பவுன் நகைகளையும், 5 ஆயிரம் ரூபாய் பணம், கடையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். கூகுல் பே பின் நம்பரை வாங்கி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றியதோடு, செல்போனையும் பறித்துக்கொண்டு, கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தாடைகளையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும், போலீசில் கூறினால் திரும்பி வந்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சந்துரு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்