வலையில் சிக்கிய ஒரே ஒரு மீனால் லட்சாதிபதியான மீனவர்!

x

காக்கிநாடாவில் ஒரு மீன் மூன்று லட்சத்துக்கு விலை போனதால், அதைப்பிடித்த மீனவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

காக்கிநாடாவில் மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கச்சிடி மீன் சிக்கியது. இந்த மீனின் நுரையீரல், பித்தப்பை ஆகியவை மிகவும் மருத்துவ குணம் கொண்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மீனை ஒருவர் மூன்று லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி சென்றதால், அந்த மீனவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்