இஸ்ரோ முன்னாள் தலைவரின் வாழ்வியல் குறித்து உருவான படம்

x

முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டுள்ள அறிவியல் யானம் திரைப்படம், சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது.

இஸ்ரோ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் வாழ்வியல் குறித்து யானம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் ராக்கெட் செலுத்தும் போது சந்தித்த சவால்கள் குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த வினோத் மன்காரா என்பவர் இயக்கிய இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவர் சோம்நாத், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், யானம் படத்தில் ஸ்லோகங்களில் அறிவியல் சார்ந்த பல கருத்துக்கள் உள்ளடக்கி இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், சூரிய குடும்பம், மருத்துவம் புவியியல் சார்ந்த விஷயங்கள் என பல ஆய்வுகள் எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்