ஜடேஜா - தோனி இடையே சண்டையா..? - ஜட்டு ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

x

கடந்த 20ம் தேதி டெல்லி அணியுடனான லீக் போட்டி முடிந்த பிறகு தோனியும் ஜடேஜாவும் லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். எதற்காக வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஜடேஜாவிடம் தோனி கோபமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ கர்மா நிச்சயம் திருப்பித் தரும் என சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டு உள்ளார். இதனால், சென்னை அணிக்கும் ஜடேஜாவிற்கும் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்