புரட்டாசியை பொருட்படுத்தாத திருவிழா - துள்ளிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்...

x

புரட்டாசி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, சென்னை காசிமேடு மீன்பிடி ஏலக்கூடம், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த வாரம் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில், இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் மகாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்பட்டது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் களைகட்டும் நிலையில், மகாளய அமாவாசை என்பதால், காசிமேடு மீன்பிடி ஏலக்கூடம் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து களையிழந்து காணப்பட்டது.

மீன்கள் குறைவான விலையில் விற்கப்பட்டாலும், அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்