ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட பிரபல சீரியல் நடிகை

x

மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு தளத்தில் டிவி நடிகை துனிஷா ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே வாலிவ் நகரில் நடந்த டிவி சீரியலுக்கான படப்படிப்பில் துனிஷா ஷர்மா பங்கேற்றிருந்தார். இந்நிலையில், அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில், துனிஷா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சக ஆண் நடிகரான ஷீசன் கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்