காட்டு கோவிலுக்கு சென்ற குடும்பம், திடீரென காணாமல் போன மகன் - பதறியடித்து தேடிய பெற்றோர்

x

பிரான்மலை காட்டு பகுதியில் சிக்கிய தவித்த இளைஞர், 14 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். சிவகங்கை மாவட்டம் பொன்னடைபட்டியை சேர்ந்த விஷ்ணுராம், பிரான்மலை கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது பாதை தவறி காட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் வழி தெரியாமல் தவித்த அவர், செல்போன் மூலம் நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் ஆப் ஆகிவிடவே, பெற்றோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாரும், வனத்துறையினரும், 14 மணி நேரத்திற்கு பிறகு விஷ்ணுராமை மயங்கிய நிலையில் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்