“அவனுங்க நாலு பேர தூக்குல போட்டா.. என் புருஷன் உசுரோட வந்துருவானா?“ - கார் லைசென்ஸ் இல்லாத 18 வயது இளைஞனால் சிதைந்த குடும்பம்

கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் தாயார் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா பெரியார் சாலையில், இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் திருமுருகன் என்பவர் உயிரிழந்தார். இதில் கார் ஓட்டி வந்த நபர், 18 வயதான ஸ்ரீ ஷிவ் விக்ரம் என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், தங்களுக்கு இனி ஆதரவாக யாரும் இல்லை எனக் கூறி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com