தம்பதிகளுக்கிடையே குடும்ப தகராறு.. விரக்தியில் விபரீத முடிவு... | Tiruvarur

x

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின் ஊழியர் மாசி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்குள் சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி இருவரும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்