அளவுக்கு மீறிய கடனால் அரங்கேறிய சோகம்... வங்கியிலிருந்து வந்த நோட்டீஸ்... குடும்பத்துடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

x

அளவுக்கு மீறிய கடனால் அரங்கேறிய சோகம்... வங்கியிலிருந்து வந்த நோட்டீஸ்... குடும்பத்துடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே குறிங்குளத்தை சேர்ந்தவர் ரமேசன். இவருக்கு சுஜாதா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ரமேசன் வளைகுடா நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ரமேசனுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்ததாகவும், கடனை உடனடியாக கட்ட வில்லையென்றால் வீட்டினை ஜப்தி செய்ய உள்ளதாக வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேசன், வளைகுடாவில் இருந்து திரும்பிய அன்றிரவே வீட்டில் மனைவி மற்றும் மகள் ரேஷ்மாவுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்