இளம் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய போலி சாமியார்! - போலீசார் அதிரடி நடவடிக்கை

x

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, இளம் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய போலி சாமியாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வள்ளுவபுரத்தை சேர்ந்த தம்பதியினர் மனோகரன், ஸ்ரீலட்சுமி தம்பதி வீட்டில், சின்னதுரை என்ற போலி சாமியார் கெட்டது நீங்க பூஜை செய்வதாக கூறியுள்ளார். பின்னர், சின்னதுரையை அழைத்துக் கொண்டு, பூஜை பொருட்கள் வாங்க மனோகரன் சென்றுள்ளார். பதற்றமடைந்த சின்னதுரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரிடம் இருந்து தப்பியுள்ளார். பின்னர், மனோகரனின் மகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியதை அடுத்து, புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்