மதுபோதையில் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற இளைஞர்.. நெல்லையில் பயங்கரம்

x

நெல்லை மாவட்டம் கோவில்குளம் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்த அரசு பேருந்தின் எதிரே இளைஞர் ஒருவர் வாளுடன் நின்றுள்ளார். ஓட்டுனர் ஸ்டாலின் ஹாரன் அடித்து ஒதுங்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அவரை தாக்க முயற்சித்துள்ளார்.

பயணி ஓருவர் அந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்