பேருந்துக்காக நின்றிருந்த பயணியை ரத்தம் தெறிக்க தாக்கிய போதை ஆசாமி- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை மயிலாப்பூரில், காலை வேளையில் கள்ளத்தனமாக மது வாங்கி அருந்திய நபர், பேருந்துக்காக காத்திருந்த நபரை தாக்கியதில், நெற்றியில் காயம் ஏற்பட்டது. yellow pages பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஏழுமலை என்பவரிடம் போதை ஆசாமி தகராறு செய்துள்ளார். போதை ஆசாமி தாக்கியதில் ஏழுமலைக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளரின், விசாரணை நடத்தியதுடன், காயமடைந்த ஏழுமலையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்