ஒரு குடும்பத்துக்கும் ஊர் மக்களுக்கும் இடையே தகராறு

x

ஒரு குடும்பத்துக்கும் ஊர் மக்களுக்கும் இடையே தகராறு

திருக்காட்டுப்பள்ளி அருகே முன்விரோதம் காரணமாக, ஒரு குடும்பத்துக்கும், ஊர்மக்களுக்கும் இடையே தகராறு காரணமாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த திருச்சென்னம்பூண்டியில், கோயில் கட்டுவது தொடர்பாக ஒரு குடும்பத்துக்கும், ஊர் மக்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதில், வடிவழகன் என்பவரை எதிர்த் தரப்பினர் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த வடிவழகன் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடிவழகனின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரைக் கைது செய்தனர். இதேபோன்று, எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர் கொடுத்த புகாரின் பெயரில், 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய்த போலீசார், 3 பேரைக் கைது செய்தனர். இதற்கிடையே இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்