"கோவையில் ஒரு முட்டுக்காடு" - "இந்தியாவிலேயே தமிழகம் தான் Top" - அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்

x

சென்னை அருகே முட்டுக்காட்டில் அமைக்கப்படும் மிதக்கும் உணவகம் போன்று, ஏற்காடு, உதகை, கோவையிலும் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகரில் உள்ள கைவிடப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு 100 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளை கவர புதிய படகு குழாம்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்