அமெரிக்கால வாழைப்பழத்துக்காக ஒரு day... அத எப்டி செலிப்ரேட் பண்றாங்க ?
நாமலாம் சில நேரம் வாழை பழத்தை வாங்க போய்... பிரஷ்ஷா மஞ்ச கலர்ல இருக்கேனு ஆசை பட்டு வாங்கிடுவோம்... ஆனா உரிச்சு பாத்தா தான் தெரியும் அது காய்னு... அதுகப்புறம் அது பழுக்குற வரை நாம வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருப்போம்... இந்த மாதிரியான நேரத்தில பழுக்காத வாழை பழத்தை பழுக்க வைக்க... ஒரு பிளாஸ்டிக் கவர்ல ஆப்பிள் இல்லனா தக்காளியோட சேத்து 6 மணி நேரம் வச்சோம்னா நல்லாவே பழுத்துடும்னு சொல்றாங்க...எல்லாருக்கும் பர்த்டே கொண்டாடுறோம்... ஏன் நம்ம வீட்டுக்கு நாய் , பூனைக்குலாம் டாக் டே, கேட் டேனு ஏதோதோ டேலாம் கொண்டாடுறோம்... ஆனா நம்மள வாழ வச்ச வாழை பழத்துக்கு என்னிக்காச்சும் ஒரு நல்ல நாள் பாத்து கொண்டாடனும்னு தோனுச்சா...
சரி... நமக்கு தோனலனா என்ன...? அதான் நம்ம அமெரிக்காகாரங்க உலக அளவுல ஏப்ரல் 19ஆம் தேதியை Banana day னு சொல்லி கொண்டாடிட்டு இருக்காங்களே....
சரி வாங்க இந்த Banana day வ எப்படி... கொண்டாடுறதுனும்... Banana ல வேற என்னலாம் சுவாரஸ்யம் இருக்குனு தெரிஞ்சுக்கலாம்...
வாழைப்பழத்தின் பூர்வீகம் இந்தியா
ஒவ்வொருக்கு பழங்களுக்கும்னு ஒரு பூர்வீகம் இருக்கும்... அதுமாதிரி வாழை பழத்தோட பூர்வீகம் எங்க இருக்குனு தேடி பாத்தா..... அது கடைசியில இந்தியாவுல வந்து முடியுது...
உலகத்துலயே வாழைபழத்தை அதிகம் உற்பத்தி செய்யுற நாடுகள்ல இந்தியா தான் முதலிடத்துல இருக்கு அது மட்டுமில்லாம.... கி மு 327 ல இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த அரபு நாட்டு வணிகர்கள் நம்மூரு வாழை பழத்தை சாப்பிட்டு பாத்து அதோட டேஸ்ட் பிடிச்சு போக.... அதை உலகம் முழுக்க பரப்ப ஆரம்பிச்சதின் விளைவு தான் இன்னைக்கு யாராலயும் தவிர்க்க முடியாத நம்பர் ஒன் பழமா இருக்கு வாழை!
ஆப்ரிக்கா, கம்போடியாவின் தேசிய பழம்...
நாமலாம் மாம்பழத்தை தேசிய பழமா கொண்டாடுற மாதிரி.... மத்திய ஆப்ரிக்கா மற்றும் கம்போடியா நாடுகள்லாம் வாழை பழத்தை தேசிய பழமா அறிவிச்சி கொண்டாடுறாங்களாம்பா...
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை வகைகள்...
வாழை பழம்னாலே நமக்கு தெரிஞ்சது சாமி வாழை பழம் , செகப்பு வாழைப்பழம் , பச்சை வாழைப்பழம் அவ்வளோதான் ஆனா... பேயன், அடுக்கு, மொந்தன், நவரைனு உலக நாடுகள்ல 1000 க்கும் மேற்பட்ட வாழை பழங்கள் உற்பத்தி செய்யபடுதாம்....
எனர்ஜி ஏற்றும் வாழைப்பழம்...
விளையாட்டு வீரர்கள், போர் வீரர்கள்லாம் வாழை பழத்தை அதிகமா எடுத்துப்பாங்கலாம்... ஏனா இதுல தான் உடல் சோர்வடையாம இருக்குறதுக்கு குள்கோஸ் சத்து நிறையவே இருக்குனு சொல்றாங்க...
வாழைப்பழத்தை பழுக்க வைக்க சூப்பர் டிப்ஸ்...
நாமலாம் சில நேரம் வாழை பழத்தை வாங்க போய்... பிரஷ்ஷா மஞ்ச கலர்ல இருக்கேனு ஆசை பட்டு வாங்கிடுவோம்... ஆனா உரிச்சு பாத்தா தான் தெரியும் அது காய்னு... அதுகப்புறம் அது பழுக்குற வரை நாம வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருப்போம்... இந்த மாதிரியான நேரத்தில பழுக்காத வாழை பழத்தை பழுக்க வைக்க... ஒரு பிளாஸ்டிக் கவர்ல ஆப்பிள் இல்லனா தக்காளியோட சேத்து 6 மணி நேரம் வச்சோம்னா நல்லாவே பழுத்துடும்னு சொல்றாங்க...
Banana Day எப்படி கொண்டாடலாம் ?
பனானா டேய் அன்னைக்கு வாழைப்பழத்தால உங்க வாழ்க்கைல நடந்த சம்பவங்களை மத்தவங்களோட பகிர்ந்துகனுமாம்... அதாவது வாழை பழ தோல் வழுக்கி விழுந்துருக்கலாம்... இல்ல கவுண்டமனி செந்தில் காமெடி மாதிரி எதாச்சும் ஒரு சம்பவம் உங்க வாழ்க்கைல நடந்துருக்கலாம், இந்த மாதிரி எதுவா இருந்தாலும் அதை சோசியல் மீடியாவுலயோ இல்ல நண்பர்களோட சேர் பன்னிக்கனுமாம்...