கடல் போல் காட்சி அளிக்கும் அணை - கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், அணைப்பாளையம், செட்டிபாளையம், ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையிலும் வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தற்போது அமராவதி ஆற்றில் 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் நீர்வளத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் போல் காட்சி அளிக்கும் அணையை சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்து வனம் போன்று காட்சியளிக்கிறது. இதனை சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிது. இதேபோல் பழனி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக சண்முகா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அமராவதி மற்றும் சண்முகா நதி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கனமழை காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காரணி கிராமத்திற்குச் செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல, மங்களம் கிராமத்திற்கு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர். மழை மீண்டும் அதிகரித்தால், போக்குவரத்து முற்றிலும் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்