ரூ.1,500 பணத்துக்காக டிவி மெக்கானிக்கை ஆம்புலன்ஸ் ஏற்றி கொன்ற வாடிக்கையாளர் - வாக்குமூலம் கேட்டு மிரண்ட போலீஸ்

x

டிவியை பழுது பார்க்க கொடுத்த ஆயிரத்து 500 ரூபாயை திருப்பி கொடுக்காத டிவி மெக்கானிக்கை ஆம்புலன்ஸை வைத்து ஏற்றி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஆம்புலன்ஸ் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸின் பதிவெண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அது பட்டம் புதூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. முருகனை பிடித்து விசாரணை செய்ததில், டிவியை பழுது பார்க்க கொடுத்த ஆயிரத்து 500 ரூபாயை திருப்பி கொடுக்காததால் சங்கரலிங்கத்தை ஆம்புலன்ஸை ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்