கழுத்தை நெறிக்கும் கடன்- வல்லரசு இப்போ டல்லரசு... "ஜூன் 5க்குள்... மொத்த பொருளாதாரமும் காலி.."

x

வல்லரசான அமெரிக்கா தான் உலகின் மிகப் பெரிய கடன்கார நாடாகவும் உள்ளது. தற்போது அமெரிக்க அரசின் கடன் களுகான உச்ச வரம்பு 31.4 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஆனால் கடந்த ஜனவரி 19ல், இந்த உச்ச வரம்பு எட்டப்பட்டு, தற்போது, இதர வழிகள் மூலம் நிதி திரட்டப் பட்டு, சமாளிக்கப்படுகிறது.ஜூன் 5 முதல், இத்தகைய வழிமுறைகளும் அடைபட உள்ளது. உச்ச வரம்ப்பை உயர்த்த, பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பலம் கொண்ட எதிர்கட்சியான குடியரசு கட்சி, பல நிபந்தனைகளை விதித்தது.எதிர்கட்சி தலைவர் கெவின் மேக்கார்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஜோ பைடன், ஒரு உடன்படிக்கையை இறுதி செய்தார்.

இதன் படி 2025 ஜனவரி வரை கடன்களுக்கான உச்ச வரம்புநீக்கப்படுகிறது. ராணுவ செலவுகள் தவிர்த்து, இதர துறைகளுக்கான செலவுகளை 2024 வரை உயர்த்த தடை விதிக்கப்படுகிறது. 2025இல் இதை ஒரு சதவீதம் உயர்த்த அனுமதிக்கப்படுகிறது.இதற்கான சட்டத் திருத்த மசோதா அமெரிக்க நாடாளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், நேற்று (31-5-23) 314 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜோ பைடன் கட்சியைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் உள்பட 117 உறுப்பினர்கள் இதை எதிர்த்து வாக்களித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இனி இது சென்ட் சபைக்கு அனுப்பப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜோ பைடன், செனட் சபையில் இதை வெகு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஜூன் 5ஆம் தேதிக்குள் இது நிறைவேற்றப்படாவிட்டால், அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து, பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு, உலகப் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்