பெட்ரோல் பங்க் ஊழியருடன் வெடித்த மோதல்.. ஊராட்சி தலைவரை வெளுத்து விட்ட ஊழியர் - பரபரப்பு காட்சி

x

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மதனஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றிவேல் செல்வம், தும்பேரி கூட்டு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர் குருபிரசாத்துக்கும் வெற்றிவேல் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். இதில், வெற்றிவேல் செல்வத்தை சரமாரியாக தாக்கிய குருபிரசாத், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வெற்றிவேல் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குருபிரசாத்தை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்