தண்ணீரை குடித்த குழந்தை பலி - ஆபத்தான நிலையில் 30 பேர்... நடந்தது என்ன?

x

கர்நாடகாவில் மாசு கலந்த தண்ணீரை குடித்து குழந்தை உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ரெகலமரடி கிராமத்தில் குடிநீர் குழாயில் வந்த மாசு கலந்த தண்ணீரை குடித்தவர்களுக்கு திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களில், 6 குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாயில் வந்த தண்ணீரில் மாசு கலந்திருந்ததே உடல்நல பாதிப்புக்கு காரணம் என சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்