மத்திய அமைச்சரவையில் மாற்றமா..? - பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

x

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பிரகதி மைதானத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்