புழல் சிறையில் கழிவறையிலிருந்து எடுக்கப்பட்ட செல்போன்

x

சென்னை புழல் சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக சிறை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்ட போது, கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சரவணன் என்ற விசாரணை கைதி செல்போன் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்