ஓட்டுநரே இல்லாத கார்..Reverse-ல் சென்றதால் அதிர்ச்சி..நடுரோட்டில் பரபரப்பு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியில்,ஒருவர் தனது சொகுசு காரை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். திடீரென அந்த சொகுசு கார் திடீரென தாமாக பின்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு நிலவியது. அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், தனது வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு, சமயோசிதமாக செயல்பட்டு ஓடி சென்று காரின் கதவை திறந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com