பைக் மீது அதிவேகமாக மோதிய கார்... துடிதுடித்து பலியான சினிமா துணை நடிகர்

x

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவர், சினிமா துறையில் துணை நடிகராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு வயதில் மகள் உள்ளனர். இரவு 11.30 மணி அளவில், கே.கே.நகர் ஆற்காடு சாலையில் சரண்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்றிருந்த கார் மீது மோத, அந்தக் கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில், சரண்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து விசாரித்தபோது, சாலிகிராமம் பகுதியை சேர்ந்த துணை நடிகர் பழனியப்பன் என தெரியவந்தது. மேலும், பழனியப்பன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதையும், போலீசார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக பழனியப்பன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்