அதிவேகத்தில் நிற்காமல் சென்ற கார்... சேசிங் -ல் மடக்கிப் பிடித்து காருக்குள் பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், மதுவிலக்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அதிவேகமாக வந்த கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ரோந்து வாகன போலீசார், அந்த காரை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த அந்த நபர், காரை சப்படி என்ற இடத்தில் நிறுத்தி விட்டு அருகிலுள்ள ஏரிப் பகுதிக்கு தப்பி ஓடினார். போலீசார் அந்த பகுதிக்கு ஓடிச் சென்று அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, அவருடைய காரில் இருந்து 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்