அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி சுக்கு சுக்காய் நொறுங்கிய பஸ்-லாரி... 10 உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து...

x

மகாராஷ்டிராவில் சுற்றுலா பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிர்ழந்தனர்.

மும்பையில் இருந்து ஷீரடிக்கு 45 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நாசிக் - ஷீரடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியும், சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொண்ட மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்