ஹேக்கர்ஸ்-களுக்கு ஒரு பம்பர் பரிசு - சென்னை போலீஸ் அதிரடி அறிவிப்பு | HACKERS | POLICE

x

சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக ஹேக்கர்ஸ்-களுக்கு 8 தலைப்புகளில் போட்டி நடத்தப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் சிசிடிவி கேமராவில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக காட்சிகள் தெளிவில்லாமல், குற்றவாளிகள் தப்பிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த குறைபாடுகளை களைவதற்காக, சைபர் ஹேக்கத்தான் எனும் தலைப்பில் ஹேக்கர்களுக்கு போட்டி ஒன்றை, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை சந்தித்து வரும் குறைபாடுகளுக்கு வல்லுநர்கள் தீர்வு காணும் வகையில் எட்டு தலைப்புகளின் கீழ் போட்டி நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், முதல் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட போட்டி டிசம்பர் 10 ஆம் தேதியும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்