திடீரென இறந்து போன காளை நண்பன்..ஒரு நொடி கூட நண்பனை பிரியாத நாய்..சொல்லமுடியாமல் பாரத்துடன் தவிப்பு

x

சிவகங்கையில் கோயில் காளை உயிரிழந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து நாயும் பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதூர் கிராமத்தில் மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து, பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பரிசுகள் பெற்று பெருமை சேர்த்த கோயில் காளை உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. கிராமத்தினர் காளையின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்து ஊர் திடலில் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். கிராம மக்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு பிரியர்கள், என நூற்றுக்கணக்கானோர் காளையின் உடலுக்கு மலர் மாலை அணிவித்தும், வேட்டி, துண்டுகள் சார்த்தியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கோயில் காளை உடல் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் குலவை ஒலியோடு, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்