நொடிப் பொழுதில் தரைமட்டமான 17 ஆயிரம் டன் எடை கொண்ட பாலம் - வெளியான காட்சிகள்..

x

ஜெர்மனியில் பழமையான பாலம் ஒன்று வெடிபொருட்கள் பயன்படுத்தி நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது. ரஹ்மெடெடல் பகுதியில் இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த பாலம் பழுதடைந்த‌தால், கடந்த ஒரு ஆண்டுகளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருந்த‌து. இந்நிலையில், 17 ஆயிரம் டன் எடை கொண்ட பாலத்தை, 2 ஆயிரம் வெடி பொருட்கள் வைத்து பாலத்தை தகர்க்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பாலத்தில் இருந்த இரண்டு தூண்களில் வெடிப்பொருட்கள் வெடித்த‌தும், பாலம் முழுவதும் நொடிப்பொழுதில் கீழே விழுந்து புகைமண்டலமாக மாறியது. இதனை அப்பகுதி மக்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்