கையில் தாலியுடன் தயாராக நின்ற சிறுவன்... 3 வினாடி வீடியோ வெளியாகி பரபரப்பு - சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம்

x

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில், சிறுவன் தாலி கட்டுவதற்கு தயாராக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்து வரும் செய்து தீட்சிதர்கள், குழந்தை திருமணம் செய்வதாக புகார்கள் வெளிவந்தன. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சில தீட்சிதர்களை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக பேசி சர்ச்சையை எழுப்பினார். இதில், இந்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், குழந்தை திருமணம் நடைபெற்றதாக வெளியான புகைப்படங்கள், சடங்கு செய்த புகைப்படங்கள் என்று ஆனந்த் கூறியிருந்தார். இந்நிலையில், தீட்சதீர்களின் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டுவதற்கு கையில் தாலி வைத்திருக்கும் 3 வினாடிகள் உள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்