மரபணு பிரச்சனையால் பறிபோன சிறுவனின் கண் பார்வை - தமிழக அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

கொங்குபட்டியைச் சேர்ந்த மனோகரன், பூங்கோதை தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இதில், தனீஷ் என்ற ஆண் குழந்தை விநோத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்த போது, கண் பார்வை மிக மோசமாக பாதிப்படைந்து இருப்பது தெரிய வந்தது. மரபணு மாற்றம் காரணமாக பார்வை இழப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன் பேரில், சிறுவனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்