நண்பர்களுடன் விளையாடிய போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் - சென்னையில் பயங்கரம்

x

வீட்டின் 2வது மாடியில் இருந்து விழுந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் தேவா. இவரது எட்டு வயது மகனான சாய், தனது வீட்டில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக 2வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்தான். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் சிறுவனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்