ஆசன வாயில் வெடிகுண்டு..! அதிர்ந்து போன மருத்துவர்கள்..! பாலியல் சுகத்திற்கு ஆசைப்பட்ட முதியவர்

x

ஆசன வாயில் முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவசர அவசரமாக ஒரு முதியவர் அலறியபடி வந்துள்ளார்... மருத்துவர்கள் என்ன ஏதென்று விசாரிக்கவே, தனது ஆசன வாயில் வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளதாக வியர்க்க விறுவிறுக்க தெரிவித்துள்ளார்... அதிர்ச்சியடைந்த மருத்துவர்களும் நோயாளிகளும் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தனர்... விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு வெடிக்க குறைவான வாய்ப்பே உள்ளதாகத் தெரிவிக்க, "பக் பக்கென்று" இதயம் படபடக்க பதைபதைப்புடன் வெற்றிகரமாக முதியவரின் ஆசன வாயில் இருந்து வெடிகுண்டை பத்திரமாக அகற்றினர் மருத்துவர்கள்... 20 சென்டி மீட்ட நீளம், 5 சென்டி மீட்டர் அகலம் கொண்ட அந்த வெடிகுண்டை, பாலியல் சுகத்திற்காக ஆசைப்பட்டு முதியவர் ஆசன வாயில் தானே செலுத்திக் கொண்டது கண்டறியப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்