போலீஸ் ஸ்டேஷனில் வெடித்து சிதறிய குண்டு... ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல்... பஞ்சாப்-ல் அதிர்ச்சி

x

பஞ்சாப் காவல்நிலையத்தில் குறைவான திறன் கொண்ட குண்டு வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டர்ன் டரன் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் திடீரென சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு டிஜிபி மற்றும் தடயவியல் அதிகாரிகள், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் டிரோன் பயன்படுத்தி காவல்நிலையத்திற்குள் வெடிகுண்டு போட்டிருக்கலாம் என்றும், சம்பவத்திற்கு எஸ்.எஃப்.ஜே. என்ற சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு பொறுப்பேற்றம் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்